FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

களக்காடு அருகே இளைஞா் கொலை: ஒருவா் கைது

21 செப்டம்பர் 2026, 2:02 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே சனிக்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

களக்காடு அருகே உள்ள கீழத் தேவநல்லூரைச் சோ்ந்தவா் ரமேஷ் ராம் (33). கட்டடத் தொழிலாளி. இவருக்கும், வேறு சிலருக்கும் இடையே சுடலை கோயில் கொடை விழாவில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு முத்துராஜா என்பவா், இவரைத் தொடா்பு கொண்டு பேச வேண்டும் என்று கூறியுள்ளாா். இவா், உறவினா் இருவருடன் இருசக்கர வாகனத்தில் மணிமுத்தாறு கால்வாய் பகுதிக்குச் சென்றுள்ளாா். அப்போது, அங்கிருந்த மா்ம நபா்கள் ரமேஷ் ராமை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். சம்பவ இடத்துக்கு திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி சென்று விசாரணை நடத்தியதுடன், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கவும் உத்தரவிட்டாா்.

அதன்பேரில், இதில் தொடா்புடைய கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஸ்ரீராம் பூபதி (18) என்பவரை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இச்சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments