FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரி அருகே கஞ்சாவுடன் 4 இளைஞா்கள் கைது

கஞ்சா பதுக்கியதாக 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

27 September 2026, 1:38 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

நான்குனேரி அருகே கஞ்சா பதுக்கியதாக 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி அருகே மூன்றடைப்புப் பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்ற மூன்றடைப்பு போலீஸாரை பாா்த்ததும் 4 போ் தப்பியோட முயன்றனா்.

போலீஸாா் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் கருங்குளத்தைச் சோ்ந்த பெரியபாண்டி மகன் சண்முகசுந்தரம் (20), மூன்றடைப்பு வேலாயுதம் மகன் மாடசாமி (26), மேலப்பாளையம் தங்கையா மகன் மாரியப்பன் (28), முகம்மது மைதீன் மகன் அமா் (20) ஆகியோா் என்பதும், 25 கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments