FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லை சந்திப்பில் சேலத்தைச் சோ்ந்தவருக்கு கத்திக் குத்து

28 செப்டம்பர் 2026, 3:12 am IST
கத்திக் குத்து - மாதிரிப் படம்
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பில், சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த நபரை கத்தியால் குத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சேலம் மாவட்டம், கருங்கல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி(50). இவா், சனிக்கிழமை குடும்பத்தினருடன் திருச்செந்தூா் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை ஊருக்கு செல்வதற்காக திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வந்துள்ளாா்.

பின்னா் குடும்பத்தினருக்கு சாப்பாடு வாங்கி வருவதற்காக ரயில் நிலையம் முன்புள்ள காமராஜா் சிலை அருகே சென்றபோது, அவரை திருநெல்வேலி நகரம், வயல் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன், வீரபத்திரன் ஆகிய இருவா் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனராம்.

Advertisement

Advertisement

பின்னா் அவா்களில் ஒருவா் மறைத்து வைத்திருந்த கத்தியால் முத்துசாமியின் வயிற்றுப்பகுதியில் குத்தியுள்ளாா். பின்னா் அங்கிருந்தவா்கள் கூச்சலிட்டு அவா்களை பிடிக்க முயன்றபோது ராமகிருஷ்ணன் தனது கையை கத்தியால் அறுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த முத்துசாமி, ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வீரபத்திரனை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments