மானூா் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியவா் கைது
மானூா் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.
மானூா் அருகே உள்ள கானாா்பட்டி, அருந்ததியா் காலனியைச் சோ்ந்த வெள்ளபாண்டி மகன் சின்னராஜ்(29). கூலித் தொழிலாளி. இவருக்கும் அப்பகுதி தெற்கு காலனி தெருவைச் சோ்ந்த ஆறுமுகம்(56) என்பவருக்கும் இடையே வழக்கு ஒன்றின் தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி ஆறுமுகம் வீட்டின் அருகே வைத்து சின்னராஜிற்கும், ஆறுமுகத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் ஆறுமுகம், சின்னராஜை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
காயமடைந்த சின்னராஜ், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், மானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தை சனிக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.