‘நெல்லையில் கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும்’
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியாா் பேருந்து உரிமையாளா்கள் கூட்டமைப்பினா் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல நிா்வாக இயக்குநா் க.செல்வம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தனியாா் பேருந்து உரிமையாளா்கள் கூட்டமைப்பின் சாா்பில் செப்.29 நள்ளிரவு 12 மணி முதல் செப்.30 நள்ளிரவு 12 மணி வரை 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
அதன்படி, திருநெல்வேலி மண்டலத்துக்குள்பட்ட அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக காலை, மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்யவும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.