நாகர்கோவிலில் அல்போன்சா ஆலய தேர்பவனி
நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய ஆண்டு பெருவிழாத் தேர்பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது.
நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய ஆண்டு பெருவிழாத் தேர்பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது.
நாகர்கோவில் ஏ.ஆர்.கேம்ப் சாலையில் உள்ள இந்தத் திருத்தலத்தின் ஆண்டுப் பெருவிழா ஜூலை 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜோஸ்முட்டத்துபாடம் ஆடம்பரக் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினார். திருவிழாவின் 10 நாள்களும், திருப்பலி, மறையுரை, ஆடம்பரக் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டன. இதில், பல்வேறு மறைமாவட்டங்களைச் சேர்ந்த அருட்தந்தையர் பங்கேற்று மறையுரையாற்றினர்.
10 ஆம் திருநாளில் புனித அல்போன்சா சிறப்பு நவ நாளை அல்போன்சா திருத்தல அதிபர் தாமஸ்பௌவத்துப்பறம்பில் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து, தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் ஆடம்பரக் கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றினார்.
நண்பகல் 12 மணிக்கு திருத்தேர் பவனியும், பிற்பகல் 1.30 மணிக்கு நேர்ச்சை விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றன.
மாலையில் திருக்கொடி இறக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, விழாக் குழுத் தலைவர் அகஸ்டின் தறப்பேல், துணை பங்குத்தந்தை அஜின்ஜோஸ், கைக்காரர்கள் ஜேம்ஸ் கல்லூக்காரன், அருள்செல்வம் மற்றும் பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.