குமரி மாவட்ட செஞ்சிலுவைச் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு
கன்னியாகுமரி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்துக்கு 15 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்துக்கு 15 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய செஞ்சிலுவைச் சங்க குமரி மாவட்ட கிளையில் 759 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தின் 2018-20ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்கள் தேர்தல், நாகர்கோவிலிலுள்ள மாவட்ட வருவாய் அலுவலர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது. தேர்தலை, கண்காணிப்பு அதிகாரிகளான கோமதி நாயகம், சுகன்யா ஆகியோர் நடத்தினர். தேர்தலில், நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கு 41 பேர் போட்டியிட்டனர்.
இதில், நாகர்கோவில் ரோஜாவனம் முதியோர் இல்ல இயக்குநர் அருள்கண்ணன், பேராசிரியர்கள் அய்யப்பன், கிறிஸ்துதாஸ் வில்லியம்ஸ், டால்பின்ராஜா, ஜார்ஜ், வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரி நிர்வாக அறங்காவலர் ஹமீது, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர்.டேனியல், ஜெயகர், குமாரதாஸ், லெஸ்லின், மேரி ஜெசிரோச், மோகன், குழித்துறை ரோட்டரி சங்கத் தலைவர் ரமேஷ்குமார், சிவகுமார், விஜயகுமாரன் நாயர் ஆகிய 15 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.