எல்லோராலும் நேசிக்கப்பட்ட மாமனிதரை இந்தியா இழந்துவிட்டது: பி.முகம்மது இஸ்மாயில்
இந்தியாவில் எல்லோராலும் நேசிக்கப்பட்ட மாமனிதரை நாடு இழந்து விட்டது என மதச்சார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவர் பி.முகம்மது இஸ்மாயில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்தியாவில் எல்லோராலும் நேசிக்கப்பட்ட மாமனிதரை நாடு இழந்து விட்டது என மதச்சார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவர் பி.முகம்மது இஸ்மாயில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியது: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கட்சி வேறுபாடின்றி எல்லோராலும் நேசிக்கப்பட்டவர். அந்த உயர்ந்த மனிதரை இந்த நாடு இழந்துவிட்டது. அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவர் பிரதமராக இருந்தபோது நாட்டுக்கு ஆற்றிய பணிகள் மக்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.