வாஜ்பாய் மறைவு: குமரி மாவட்டத்தில் இன்று 10 இடங்களில் மௌன ஊர்வலம்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.17) பத்து இடங்களில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெறுகிறது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.17) பத்து இடங்களில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெறுகிறது.
இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வியாழக்கிழமை மறைந்ததையடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், குமரி மாவட்ட பாஜகவினர் அனைத்து கிளைகளிலும் அவரது படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்த வேண்டும்.
வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குமரி மாவட்ட வர்த்தகர்கள், தனியார் நிறுவனத்தினர், கல்வி நிறுவனங்கள், முழு அடைப்பு செய்து ஒத்துழைக்க வேண்டுகிறேன். மாவட்டத்தில் 10 இடங்களில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெறுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.