FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மார்த்தாண்டம் அருகே வியாபாரி வீட்டில் திருட முயற்சி: 3 பேரிடம் விசாரணை

மார்த்தாண்டம் அருகே வாழைத்தார் வியாபாரி வீட்டில் புகுந்து திருட முயன்ற கேரள மாநில இளைஞர்கள் 3 பேரை

Updated On : 31 டிசம்பர் 2018, 9:46 am IST
பகிர்:

மார்த்தாண்டம் அருகே வாழைத்தார் வியாபாரி வீட்டில் புகுந்து திருட முயன்ற கேரள மாநில இளைஞர்கள் 3 பேரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மார்த்தாண்டம் அருகே பயணம் வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவர் மார்த்தாண்டம் சந்தையில் வாழைத்தார் வியாபாரம் செய்து வருகிறார். சனிக்கிழமை மாலையில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றாராம். இந்நிலையில், இரவு 7 மணிக்கு மேல் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 இளைஞர்கள் வீட்டின் முன்பக்கம் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு, வீட்டின் பின்பக்கம் சென்று வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றனராம்.
இதைக் கண்ட அப்பகுதியினர் அங்கு திரண்டு வந்ததையடுத்து அவர்கள் தப்பியோட முயன்றனர். இதில் 3 பேரை பொதுமக்கள் பிடித்தனர். ஒருவர் தப்பிவிட்டார். தொடர்ந்து இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மார்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் அப்பகுதிக்கு வந்து, பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த இளைஞர்களை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரம், பாறசாலை மற்றும் பாத்திமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments