FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

தாம்பரம் - நெல்லை அந்தியோதயா ரயிலை குமரி வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சென்னை தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படவுள்ள அந்தியோதயா ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து

Updated On : 8 ஜூன் 2018, 1:24 am IST
பகிர்:

சென்னை தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படவுள்ள அந்தியோதயா ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என ரயில் பயணியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்கச் செயலர் பி. எட்வர்ட் ஜெனி கூறியது: சென்னை தாம்பரத்திலிருந்து மதுரை வழியாக திருநெல்வேலிக்கு தினசரி செல்லும் வகையில் அந்தியோதயா ரயில், கடந்த ரயில்வே கால அட்டவணையில் அறிவிக்கப்பட்டது. 
இதே போன்று கொச்சுவேலி - மங்களூரு இடையே வாரத்தில் இரண்டு நாள்களுக்கும், செங்கோட்டை - சென்னைக்கு தினசரியும் அந்தியோதயா ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இந்த ரயில்களில் ஒரு ரயில் கூட கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அறிவிக்கப்படவில்லை.
தாம்பரம் - திருநெல்வேலி அந்தியோதயா ரயிலில் 16 பெட்டிகளும் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்டதாகும். சென்னைக்கு செல்லும்  கன்னியாகுமரி, அனந்தபுரி உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் 2 முதல் 4 பெட்டிகள் மட்டுமே உள்ளன. 
இந்த பெட்டிகளில் அனைவருக்கும் இருக்கை கிடைக்காமல் பலர் சென்னை வரை நின்றவாறு பயணம் செய்ய வேண்டியுள்ளது. அந்தியோதயா ரயில்களில் அதிகளவில் முன்பதிவில்லாத பெட்டிகள் உள்ளதால் ஏழை பயணிகள் குறைந்த கட்டணத்தில் சென்னைக்கு செல்ல முடியும்.
தாம்பரம் - திருநெல்வேலி அந்தியோதயா ரயிலை வெள்ளிக்கிழமை மத்திய ரயில்வே இணை அமைச்சர் தாம்பரத்தில் தொடங்கிவைக்கும் நிலையில், இந்த ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்கும் வகையில்,  தொடக்க விழா மேடையிலேயே கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்க வேண்டும். இதற்கான முயற்சியை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments