FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் இம்மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களிலும் சனிக்கிழமை (ஜூன் 9) நடைபெறுகிறது. 

Updated On : 8 ஜூன் 2018, 1:28 am IST
பகிர்:

பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் இம்மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களிலும் சனிக்கிழமை (ஜூன் 9) நடைபெறுகிறது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் இம்மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களிலும் சனிக்கிழமை   நடைபெறவுள்ளது.
அகஸ்தீசுவரம் வட்டத்தில் தெங்கம்புதூர் பேரூராட்சி அலுவலகம்,  தோவாளை வட்டத்தில் திடல் ஊராட்சி அலுவலகம்,  கல்குளம் வட்டத்தில் காட்டாத்துறை ஊராட்சி அலுவலகம்,  விளவங்கோடு வட்டத்தில் இணையம்புத்தன்துறை ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றில், அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில், காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை இந்த குறைதீர் முகாம்   நடைபெறவுள்ளது.  
இந்த ஊராட்சி, பேரூராட்சி பகுதிக்குள்பட்ட குடும்ப அட்டைதாரர்களில் மின்னணு குடும்ப அட்டை புகைப்படம் மற்றும் தேவையானஆவணங்கள் இல்லாமல் இதுவரை மின்னணு குடும்ப அட்டை பெறமுடியாமல் உள்ளவர்கள்,  ரேஷன் கடைகளில்   ஒட்டப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்பத் தலைவரின் புகைப்படம்,  செல்லிடப்பேசி எண்,  ஆதார் எண் பதிவு செய்தல் போன்ற திருத்தங்களை செய்து விரைவில் மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு மனு அளித்து தீர்வு காணலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments