காமன்வெல்த் போட்டி: தடை தாண்டும் ஓட்டத்தில் ஷிர்சே இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்!
காமன்வெல்த் போட்டிகளில் 110 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் தேஜஸ் அசோக் ஷிர்சே இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளில் 110 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் தேஜஸ் அசோக் ஷிர்சே இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளின் 5-ஆவது நாளான நேற்று (ஜூலை 26) தடகளப் போட்டிகள் தொடங்கின.
இதில், 110 மீ தடை தாண்டும் ஓட்டப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் இந்திய வீரர் தேஜஸ் அசோக் ஷிர்சே 3-ம் இடம்பிடித்தார். இதன்மூலம், அவர் இறுதிச் சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.
Advertisement
Advertisement
24 வயதான ஷிர்சே, முதலில் சுமாராகத் தொடங்கினாலும், பின்னர் மீண்டு வந்து 13.76 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார். இவர் முதலிடம் பிடித்த ஜமைக்காவின் ஜெரோம் கேம்ப்பெல் (13.33 வினாடிகள்) மற்றும் இரண்டாமிடம் பிடித்த இங்கிலாந்தின் சாமுவேல் பென்னட் (13.20 வினாடிகள்) ஆகியோருக்குப் அடுத்தபடியாக பந்தயத்தை முடித்தார்.
தகுதிச்சுற்று விதிகளின்படி, இரண்டு ஹீட்களில் (ரவுண்ட்) முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களும், மொத்த பந்தயத்தில் வேகமாக ஓடிய 2 வீரர்களும் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவர். எனவே, 3-ம்இடத்தைப் பிடித்ததன் மூலம், ஷிர்சே இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இறுதிச்சுற்று இந்திய நேரப்படி 28 ஜூலை அன்று அதிகாலை 2.15 மணிக்கு நடைபெறவுள்ளது.
13.27 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த தனது தனிப்பட்ட சாதனையை அவர் முறியடித்து காமன்வெல்த்தில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Commonwealth Games: Shirshe advances to the final round of the hurdles race
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.