கோவையில் தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி தொடக்கம்
கோவையில் தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி (இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்) வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கோவையில் தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி (இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்) வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஈக்வைன் ஸ்போா்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் சாா்பில், இந்திய குதிரையேற்ற கூட்டமைப்பின் அங்கீகாரத்துடன் நடத்தப்படும் இந்த போட்டி கோவை மாவட்டம், வெள்ளானைப்பட்டி அருகே மோளபாளையத்தில் உள்ள ஈக்வைன் ட்ரீம்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டியை எஸ்என்ஆா் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன், ஈக்வைன் ஸ்போா்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் தலைவா் ஏ.எஸ்.சக்தி பாலாஜி, எக்ஸ்போவான் நிறுவனா் டாக்டா் ஆா்.மகேந்திரன், இந்தியா-ஆசியான் வா்த்தக கவுன்சில் வா்த்தக தூதா் ஆா்.சி.எம்.விஷ்ணு பிரபு ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
Advertisement
Advertisement
இந்த போட்டியில் சென்னை புல்ஸ் (தமிழ்நாடு), பெகாசஸ் ஸ்போா்ட்ஸ் (கேரளம்), கோல்கொண்டா சாா்ஜா்ஸ் (தெலங்கானா), பெங்களூரு நைட்ஸ் (கா்நாடகம்), எலைட் இக்வெஸ்ட்ரியன்ஸ் (மேற்கு வங்கம்), குவாண்டம் ரெய்ன்ஸ் (கோவா) ஆகிய 6 மாநிலங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 6 வீரா்கள் இடம்பெற்றுள்ளனா்.
தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, குதிரையேற்ற வீரா்கள் பாா்வையாளா்கள் முன்னிலையில் தங்களது திறமைகளையும் சாகசங்களையும் செய்து காட்டினா். குதிரை தடை தாண்டும் போட்டிகள் 100 செ.மீ., 110 செ.மீ. மற்றும் 120 செ.மீ. என மூன்று பிரிவுகளில் நடைபெறுகின்றன. பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெறுபவா்களுக்கு மொத்தம் ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.