0.04 வினாடிகளில் வெள்ளியைத் தவறவிட்ட குல்வீர் சிங்... 5,000 மீ. ஓட்டத்தில் இந்தியாவுக்கு முதல் வெண்கலம்!
காமன்வெல்த் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ள குல்வீர் சிங்கைப் பற்றி...
காமன்வெல்த் 5000 மீட்டர் நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் குல்வீர் சிங்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 23 தொடங்கின. வருகிற இன்று (ஆக. 2) வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில், 74 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் சனிக்கிழமை நிலவரப்படி 13 தங்கப்பதக்கம் உள்பட 38 பதக்கங்களை வென்றிருந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவுக்காக 10,000 மீட்டர் ஓட்டத்தில் பஞ்சாபைச் சேர்ந்த குல்வீர் சிங் கலந்து கொண்டார்.
பந்தய தூரத்தை 13.23.61 நிமிடத்தில் இலக்கை எட்டிய கென்யாவின் மேத்யூ கிப்சும்பா கிப்சாங் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதற்கு முன்பாக 5,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றிருந்த ஆஸ்திரேலியாவின் கை ராபின்சன், 13.24.70 நிமிஷத்தில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
13.24.95 நிமிஷத்தில் பந்தயத்தைத் தூரத்தை எட்டிய இந்தியாவின் குல்வீர் சிங், 0.04 வினாடிகள் வித்தியாசத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் 5,000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
5000 மீட்டர் மற்றும் 10,000 மீட்டர் ஆகிய போட்டிகளிலும் சாதனைகளைப் படைத்துள்ள 28 வயதான குல்வீர் சிங், சில நாட்களுக்கு முன்பு 10,000 மீ ஓட்டப்பந்தயத்தில் குல்வீர் சிங் வெள்ளி வென்றிருந்தார்.
India's Gulveer Singh etched his name into the history books by winning the bronze medal in the men's 5000m at the Commonwealth Games 2026 in Glasgow, becoming the first Indian athlete to win two track medals at a single edition of the Games.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.