ஜூலை 2இல் ரயில் நிறுத்தப் போராட்டம்: அனைத்துக் கட்சி, அமைப்புகள் கூட்டத்தில் முடிவு
சமூகநீதியைத் தகர்க்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை திருத்தி எழுத வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சிகளும், தலித் இயக்கங்களும், ஜனநாயக
சமூகநீதியைத் தகர்க்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை திருத்தி எழுத வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சிகளும், தலித் இயக்கங்களும், ஜனநாயக இயக்கங்களும் இணைந்து ஜூலை 2ஆம் தேதி நாகர்கோவில், கோட்டார் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளன.
இதுதொடர்பான கூட்டம் தக்கலையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தீண்டாமை இயக்க உதவிச் செயலர் வேலப்பன் தலைமை வகித்தார். விடுதலைச் சிறுத்தை மேற்கு மாவட்டச் செயலர் ஜெயன், நகரச் செயலர் ஜெயா, தீண்டாமை ஒழிப்பு ஒன்றியச் செயலர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின்தாஸ், நிர்வாகிகள் ரதிநேசன், கணேசன், சுடலை, ரட்சணியசேனை சமுதாய நல அமைப்பு மாவட்டச் செயலர் இன்ப ஏசுராஜா, ரத்தினதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பல ஆண்டுகளாக ஜனநாயக இயக்கங்கள் போராடி பெற்றதுதான் வன்கொடுமை தடுப்புச் சட்டம். ஆனால் தற்போது இச்சட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தியபின்புதான் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்கிறது.
இதனால் வன்கொடுமை மீதான புகார்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யமுடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பை திருத்தி எழுதிட கோரி பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் இணைந்து ஜூலை 2 இல் ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.