ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது பற்றி...
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இந்த விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கவுள்ளார்.
ஆனால் 871 பேருக்கு பட்டம் வழங்க வேண்டும் என்ற நிலையில் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் மேடையில் பட்டம் வழங்குவார். மற்றவர்கள் துறைசார்ந்த பேராசிரியர்களிடம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கடந்த ஆண்டு ஆளுநர் கையில் பட்டம் பெற ஒரு மாணவி மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், மாணவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநர் கையால் பட்டம் வாங்க வேண்டும் என்று காத்திருப்பதாகவும் மிகுந்த ஏமாற்றம் அடைவதாகவும் தெரிவித்தனர்.
'ஆளுநரிடம்தான் முனைவர் பட்டம் வாங்குவோம், இல்லெயென்றால் இங்கிருந்து செல்ல மாட்டோம்' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் ஆளுநரே பட்டம் வழங்குவார் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு அழைப்பு விடுத்தும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல முனைவர் பட்டம் பெற இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலும் இன்று விழாவில் பங்கேற்கவில்லை.
இன்றைய ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்வில், வந்தே மாதரம், தேசிய கீதத்தைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாகவே பாடப்படும் என பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே அமைச்சர் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
Convocation ceremony of Nellai Manonmaniam Sundaranar University attended by the Governor
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.