FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

எஸ்எஸ்எல்சி தேர்வு: நாகர்கோவில் அல்போன்சா பள்ளி 100% தேர்ச்சி

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

Updated On : 25 மே 2018, 12:56 am IST
பகிர்:

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 208 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் முறையே 496, 494, 493 என அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 17 மாணவர்கள் 490-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 480-க்கு மேல் 56 பேரும், 475-க்கு மேல் 63 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தொடர்ந்து 16 ஆண்டுகளாக இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறது. கணிதத்தில் ஒருவர், அறிவியலில் 6 பேர், சமூகஅறிவியலில் 28 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு: இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 313 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் முறையே 1174, 1163, 1157, 1155 என அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
1,150-க்கு மேல் 7 பேரும், 1,100-க்கு மேல் 57 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதத்தில் 10 பேரும், வேதியியலில் 2 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் தாமஸ் பெளவத்துப்பறம்பில், பள்ளி முதல்வர் லிஸ்பெத், துணை முதல்வர்கள் அஜின்ஜோஸ், பிரேம்கலா, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் சேவியர் சந்திரபோஸ் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments