குலசேகரத்தில் விஷ வண்டுகள் அழிப்பு
குலசேகரம் அரசு மருத்துவமனை அருகில் கூடு கட்டியிருந்த விஷவண்டுகளை தீயணைப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு தீயிட்டு அழித்தனர்.
குலசேகரம் அரசு மருத்துவமனை அருகில் கூடு கட்டியிருந்த விஷவண்டுகளை தீயணைப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு தீயிட்டு அழித்தனர்.
குலசேகரம் அரசு மருத்துவமனை அருகில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கூந்தல் பனை மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தன. மேலும், அவ்வழியாக செல்லும் பாதசாரிகளையும், வீடுகளில் குடியிருப்போரையும் வண்டுகள் கொட்டின. இதில், பலர் காயமுற்ற நிலையில், விஷ வண்டுகளை அழிக்க வேண்டுமென்று பொதுமக்களும், அப்பகுதியைச் சேர்ந்த திமுக மாவட்டப் பிரதிநிதி லெனின், காங்கிரஸ் வட்டாரப் பொருளாளர் ஜேம்ஸ்ராஜ் ஆகியோர் குலசேகரம் தீயணைப்பு நிலையத்தில் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, தீயணைப்பு துறையினர் அங்கு சென்று விஷ வண்டு கூட்டை தீ பந்தம் மூலம் அழித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.