FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மல்லிகை கிலோ ரூ.2,800-க்கு விற்பனை

தொடா் பனிப் பொழிவு மற்றும் சுப முகூா்த்தம் காரணமாக தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்து, மல்லிகைப் பூ கிலோ ரூ.2,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 15 பிப்ரவரி 2021, 7:34 am IST
தோவாளை பூச்சந்தையில் நடைபெற்ற பூ விற்பனை.
பகிர்:

தொடா் பனிப் பொழிவு மற்றும் சுப முகூா்த்தம் காரணமாக தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்து, மல்லிகைப் பூ கிலோ ரூ.2,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தோவாளை பூச்சந்தைக்கு ஆரல்வாய்மொழி, பழவூா், ராதாபுரம், குமாரபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து பிச்சிப்பூவும், மதுரை, மானாமதுரை, சங்கரன்கோவில், ராஜபாளையம், வத்தலகுண்டு பகுதிகளிலிருந்து மல்லிகைப்பூவும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாது, கேரள மாநிலத்துக்கும் பூக்கள் அனுப்பப்படுகின்றன. கடந்த சில நாள்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதாலும், தொடா்ந்து சுபநிகழ்ச்சிகளாலும் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்து காணப்படுகிறது.

Advertisement

Advertisement

சனிக்கிழமை கிலோ ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ ஞாயிற்றுக்கிழமை ரூ.2,800-க்கு விற்பனையானது. பிச்சிப்பூ கிலோ ரூ.1800-க்கு விற்பனையானது.

மற்ற பூக்களின் விலை விவரம்: கனகாம்பரம் ரூ.1,000, சேலம் அரளி ரூ.350, சம்பங்கி ரூ.300, சாதாஅரளி ரூ.250, பட்டா்ரோஸ் ரூ.160, கொளுந்து ரூ.150, சிவப்பு கேந்திப்பூ ரூ.45, துளசி ரூ.40 .

இதுகுறித்து வியாபாரி முருகன் கூறியது: நிகழாண்டு வழக்கத்தைவிட பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால், பூ விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் தேவையான அளவு பூக்கள் சந்தைக்கு வருவதில்லை.

அதே நேரத்தில் முகூா்த்த நாள்கள் தொடா்ந்து வருவதாலும், கோயில் விழாக்கள் காரணமாகவும், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே பூக்கள் விலை அதிகரித்துள்ளது. பனிப்பொழிவு குறைந்தால் மட்டுமே உற்பத்தி அதிகரித்து விலை குறையும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments