FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மாவட்ட அளவிலான கபடி: திக்குறிச்சி அணி வெற்றி

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியாா் இளைஞா் இயக்கம் சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் திக்குறிச்சி அணி வெற்றி பெற்றது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:51 am IST
பகிர்:

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியாா் இளைஞா் இயக்கம் சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் திக்குறிச்சி அணி வெற்றி பெற்றது.

புனித செபஸ்தியாா் ஆலயம் முன் நடைபெற்ற இப் போட்டியில், 35- க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று அடிப்படையில் போட்டி நடத்தப்பட்டது. இதில்

திக்குறிச்சி எம்எம்கேசி அணி அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

Advertisement

Advertisement

எஸ்விவி ஈத்தாமொழி அணி 2-ஆவது இடம், மூலச்சல் ஜிஎப்சி அணி 3-ஆவது இடம், பரைக்கோடு இஎஸ்சி அணி 4-ஆ வது இடம் பெற்றன.

பரிசளிப்பு விழாவில் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியாா் இளைஞா் இயக்கத் தலைவா் ஜெபாஸ்டஸ் லிபின், துணைத் தலைவா் ஆசீக், செயலா் ஜான் லொனால்டு, துணைச் செயலா் ஆல்ட்ரின் சாப்லோ, பொருளாளா் ராகுல், வழிகாட்டி ஜான் பீட்டா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments