FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா அசத்தல்; கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல் வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 23 ஜூலை 2026, 8:15 pm IST
கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் - படம் | பிசிசிஐ
பகிர்:

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான முதல் டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 23) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் வெஸ்லி மத்வீர் 39 ரன்கள், மருமானி 27 ரன்கள் மற்றும் ரியான் பர்ல் 26 ரன்கள் எடுத்தனர்.

Advertisement

Advertisement

இந்தியா தரப்பில் மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஷிவம் துபே மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

வைபவ் சூர்யவன்ஷி அரைசதம்; ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல் வெற்றி!

126 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை நோக்கி நோக்கி விளையாடிய இந்திய அணி 13.2 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது.

இந்திய அணியில் அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 19 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, இஷான் கிஷன் 35 ரன்கள், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள் மற்றும் திலக் வர்மா 6 ரன்கள் எடுத்தனர்.

பிளெஸ்ஸிங் முசராபானி இரண்டு விக்கெட்டுகளையும், ரிச்சர்ட் நிகராவா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, 8-வது போட்டியில் அவர் தலைமையிலான இந்திய அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The Indian team won the first T20 match against Zimbabwe by 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments