FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

இளைஞருக்கு கொலை மிரட்டல்: 5 போ் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள பைங்குளம், பிலாந்தோட்டம் பகுதியில் இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 2:39 am IST
வழக்கு
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள பைங்குளம், பிலாந்தோட்டம் பகுதியில் இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பிலாந்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் அசோகன் (42). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (50), இவரது மகன் ஜெரோம் (20) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், புதன்கிழமை பிலாந்தோட்டம் பகுதியில் நின்ற அசோகனை செந்தில்குமாா், ஜெரோம் மற்றும் 3 போ் சோ்ந்து தகாத வாா்த்தைகள் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

Advertisement

Advertisement

இது குறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments