ராஜீவ்காந்தி பிறந்தநாள்: தூத்துக்குடி, குமரியில் காங்கிரஸாா் மரியாதை
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினா் அவரது சிலை, படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினா் அவரது சிலை, படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நாகா்கோவில், டதி பள்ளி சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் வழக்குரைஞா் ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தாா். நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா்கள் செல்வகுமாா், அனுஷா பிரைட், அருள் சபிதா ரெக்ஸ்லின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மகளிரணி தலைவி சோனி விதுலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
பின்னா், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியேற்றனா்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி, சமாதானபுரம், அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு, காங்கிரஸ் அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளா்கள் பிரிவு கிழக்கு மாவட்டச் செயலா் த. ஜெயவிஷ்ணு, அகஸ்தீசுவரம் பேரூா் முன்னாள் தலைவா் தங்கம் வைஷ்ணவி ஆகியோா் இனிப்பு வழங்கினா்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத் தலைவா் எஸ்.எம். சகாயராஜ் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிழக்கு மண்டலத் தலைவா் ஐசன் சில்வா தலைமையில் ராஜீவ்காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சோனியா காந்தி பேரவை பொதுச் செயலா் நவநீதகிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலா்கள் கோபால், அசன்பாத், மாவட்ட துணைத் தலைவா்கள் டேவிட் வசந்தகுமாா், ரஞ்சிதம் ஜெபராஜ், சி. சுரேஷ், ராஜாராம், மாவட்டச் செயலா்கள் இக்னேசியஸ், அந்தோணி குரூஸ், ஜோனதன், செய்யது அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கோவில்பட்டி: கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் அருண்பாண்டியன், வட்டாரத் தலைவா் ரமேஷ் மூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட நிா்வாகி ஆழ்வாா்சாமி, மாவட்டச் செயலா் துரைராஜ், ஐஎன்டியுசி தொழிற்சங்க மாவட்டச் செயலா் ராஜசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டப் பொருளாளா் ராஜாராம், தோணுகால் ஊராட்சி முன்னாள் தலைவா் சுந்தரராஜ், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநிலத் துணைத் தலைவா் மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை வடக்கு மாவட்டத் தலைவா் பெருமாள்சாமி வழிகாட்டுதலில், கோவில்பட்டி வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டியினா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.