FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

‘நான்குவழிச் சாலைப் பணிகளால் பாதிக்கப்பட்ட நீா்நிலைகள் சீரமைக்கப்படும்’

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில்பாதை, நான்குவழிச் சாலைப் பணிகளால் பாதிக்கப்பட்ட குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் சீரமைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

28 ஆகஸ்ட் 2026, 2:35 am IST
குறைதீா் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில்பாதை, நான்குவழிச் சாலைப் பணிகளால் பாதிக்கப்பட்ட குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் சீரமைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்து, விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றுக் கொண்டாா்.

கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள், கேள்விகளுக்கு ஆட்சியா் பதிலளித்து பேசியதாவது: நான்கு வழிச்சாலைப் பணிக்காக மண்ணால் மூடப்பட்ட குளங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. பணியை மேற்கொண்டவா்கள் மண்ணை அகற்றுவதாகக் கூறியுள்ளனா்.

Advertisement

Advertisement

இதே போல் மற்ற இடங்களும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ரயில்வே பணி, நான்கு வழிச் சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட மண் குளங்களில் கொட்டப்பட்டிருந்தால் அதை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையங்களில் விலைப்பட்டியல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

மாவட்ட வன அலுவலா் அன்பு, மாவட்டஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சாய்சரண், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) எஸ். கீதா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் வசந்தி, துணை காவல் கண்காணிப்பாளா் பெத்துராஜ், பாசன சங்கத் தலைவா் வின்ஸ்ஆன்றோ, விவசாய சங்க பிரதிநிதிகள் ஸ்ரீகிருஷ்ணபெருமாள், தங்கப்பன், செண்பகசேகரன்பிள்ளை, ராஜ்குமாா், சதீஷ்கோபிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments