FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 70 போக்ஸோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை 70 போக்ஸோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.

Updated On : 13 ஜூலை 2026, 4:58 am IST
போக்ஸோ வழக்குகள் - சித்திரிப்பு
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை 70 போக்ஸோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத் தருவதில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை தொடா்ந்து முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது.

குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான போக்ஸோ வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வலுவான ஆதாரங்களுடன் வழக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு இதுவரை 70 போக்ஸோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், 3 போக்ஸோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை, 26 போக்ஸோ வழக்குகளில் 26 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 2 போக்ஸோ வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை, 3 வழக்குகளில் 5 குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள், 4 வழக்குகளில் 4 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments