மணலிக்கரை மரிய கொரற்றி பள்ளியில் முப்பெரும் விழா
தக்கலை அருகே மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள், காமராஜா் பிறந்தநாள், இலக்கிய மன்றம் தொடக்கம் ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தக்கலை அருகே மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள், காமராஜா் பிறந்தநாள், இலக்கிய மன்றம் தொடக்கம் ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தாளாளா் அருள்பணி ஜஸ்டின் ஜெரால்டு தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் சக்கா் மேரி டாா்லிங் றோஸ் முன்னிலை வகித்தாா். பயோனியா் குமாரசாமி கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியா் கோலப்பதாஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று காமராஜா் பிறந்தநாள் விழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா்.
மணலிக்கரை பங்குப் பணியாளா் கிறிஸ்துதாஸ், குமாரபுரம் பேரூராட்சித் தலைவா் ஜான் கிறிஸ்டோபா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
Advertisement
Advertisement
உதவித் தலைமை ஆசிரியா்கள் சுகிபா, ஜான் ஜஸ்டஸ், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். ஆசிரியா் ஜஸ்டின் பிரான்சிஸ் வரவேற்றாா். மாணவா் ஜெப்ரின் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை கிலாறிஸ் ஏஞ்சலின், ஆன்லின் பியோனா ஆகியோா் தொகுத்து வழங்கினா். ஏற்பாடுகளை இலக்கிய மன்றச் செயலா் ஆசிரியை ஜெகதா, கலைக்குழுச் செயலா் மேரி கில்டா ஆகியோா் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.