FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

வீட்டு ஓடுகளை சேதப்படுத்தியவா் மீது வழக்கு

களியக்காவிளை அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் ஓடுகளை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 2 ஜூன் 2026, 3:05 am IST
வழக்கு
பகிர்:

களியக்காவிளை அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் ஓடுகளை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

களியக்காவிளை அருகே உள்ள மீனச்சல், எருத்தாவூா் பகுதியைச் சோ்ந்தவா் நெல்சன் (76), விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தீரஜ் ஜே. ரோஸ் (45) என்பவருக்கும் இடையே சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த தீரஜ் ஜே. ரோஸ் தகாத வாா்த்தைகள் பேசியதுடன், நெல்சனின் வீட்டில் வேயப்பட்டிருந்த ஓடுகளை உடைத்து சேதப்படுத்தினாராம்.

Advertisement

Advertisement

இது குறித்து நெல்சன் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments