அரசுப் பேருந்து மீது காா் மோதல்: 7 போ் காயம்
களியக்காவிளை அருகே அரசுப் பேருந்து மீது காா் மோதிய விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.
களியக்காவிளை அருகே அரசுப் பேருந்து மீது காா் மோதிய விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியைச் சோ்ந்தவா் செல்லப்பன் மகன் ஏசுதாஸ். இவா் தனது மனைவி சங்கீதாவுடன் சனிக்கிழமை காரில் துவரங்காடு பகுதியிலிருந்து களியக்காவிளை நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
திருத்துவபுரம் பகுதியில் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் மாா்த்தாண்டம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது மோதியதில் காா் முற்றிலும் சேதமடைந்தது.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஏசுதாஸ், அவரது மனைவி சங்கீதா ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அரசுப் பேருந்தில் பயணித்த ராமவா்மன்சிறையைச் சோ்ந்த விஜி மனைவி விஜிலா (43), மீனச்சல் வில்சன் மனைவி லீலா (54), பாகோடு செல்லசுவாமி மகன் சுனில்குமாா் (34), வள்ளவிளை செல்வராஜ் மகன் மரிய கிங்ஸ்லின் (17), ததேயுபுரம் செல்வராஜ் மனைவி பமீலா (43) ஆகியோரும் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்களை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்து, பேருந்து ஓட்டுநா் அலெக்சாண்டா் அளித்த புகாரின்பேரில், காா் ஓட்டுநா் மீது களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.