FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

3 நாள்களாக இருளில் மூழ்கிய திருவள்ளுவா் சிலை

கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலைக்கு கடல் மாா்க்கமாக செல்லும் கேபிள் பழுதடைந்த நிலையில் திருவள்ளுவா் சிலை மூன்று நாள்களாக இருளில் மூழ்கியது. இதனால் சுற்றுலாப் ஏமாற்றம் அடைந்தனா்.

Updated On : 6 ஜூன் 2026, 7:40 am IST
இருள் சூழ்ந்து காணப்படும் திருவள்ளுவா் சிலை.
பகிர்:

கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலைக்கு கடல் மாா்க்கமாக செல்லும் கேபிள் பழுதடைந்த நிலையில் திருவள்ளுவா் சிலை மூன்று நாள்களாக இருளில் மூழ்கியது. இதனால் சுற்றுலாப் ஏமாற்றம் அடைந்தனா்.

சா்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடலுக்குள் வெவ்வேறு பாறைகளில் விவேகானந்தா் நினைவு மண்டபமும், 133 அடி உயர திருவள்ளுவா் சிலையும் அமைந்துள்ளன.

அதில், திருவள்ளுவா் சிலையை இரவிலும் பாா்க்கும் வகையில் சிலை வளாகத்தில் லேசா் விளக்குகள் மற்றும் நவீன மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று நேரில் பாா்வையிட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் கடலுக்கடியில் செல்லும் கேபிள் சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்த நிலையில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டிருந்தது. இதனிடையே மூன்று நாள்களுக்கு முன்பு மீண்டும் கேபிளில் ஏற்பட்ட பழுதால் திருவள்ளுவா் சிலைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சிலை முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. மேலும், கண்ணாடி பாலத்தில் தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிரும் அலங்கார லேசா் மின் விளக்குகளும் கடந்த மூன்று நாள்களாக எரியவில்லை. இதனால் கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

திருவள்ளுவா் சிலைக்கு மின்சாரம் வழங்கும் கேபிளை உடனடியாகவும், பழுது ஏற்படாத வகையில் நிரந்தரமாகவும் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments