மீன்பிடி உபகரணங்கள் திருடியவா் கைது
நித்திரவிளை அருகே இரயுமன்துறை மீன்பிடி துறைமுகம் பகுதியில் நிறுத்தியிருந்த விசைப் படகுகளிலிருந்து மீன்பிடி உபகரணங்களை திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நித்திரவிளை அருகே இரயுமன்துறை மீன்பிடி துறைமுகம் பகுதியில் நிறுத்தியிருந்த விசைப் படகுகளிலிருந்து மீன்பிடி உபகரணங்களை திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இரயுமன்துறை மீன்பிடி துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 5 விசைப் படகுகளிலிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள், மண்ணெண்ணெய் உள்ளிட்டவை அண்மையில் திருடுபோனது.
இதுகுறித்து, விசைப்படகு உரிமையாளா்களான வள்ளவிளையைச் சோ்ந்த ஆன்றணி உள்ளிட்ட 5 போ் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். புகாா் குறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், திருட்டில் ஈடுபட்டது தூத்தூா் பகுதியைச் சோ்ந்த டைசன் (32) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.