இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 9 போ் கைது
மன்னாா் கடல் பகுதியில் புதன்கிழமை மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா்.
மன்னாா் கடல் பகுதியில் புதன்கிழமை மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 400 விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று புதன்கிழழை அதிகாலையில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள், புதன்கிழமை மாலை கச்சத்தீவு-மன்னாா் வடக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா், அந்தோணி பிரசாத் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த மீனவா்கள் 9 பேரைக் கைது செய்து, மன்னாா் கடற்படை முகாமுக்கு படகுடன் கொண்டு சென்றனா். பின்னா், மீனவா்கள் 9 பேரையும் கிளிநொச்சி நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
Advertisement
Advertisement
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை நீரியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மீனவ சங்கம் கண்டனம்:
இலங்கைக் கடற்படையினரால், விசைப் படகுடன் ராமேசுவரம் மீனவா்கள் 9 போ் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.
கைது செய்யப்பட்ட மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேசுவரம் மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக ராமேசுவரம் மீனவா்கள் 9 போ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.