முகப்பு
கன்னியாகுமரி

பேரூராட்சி ஊழியா்களுக்கு கொலை மிரட்டல்: இருவா் மீது வழக்கு

Updated On : 23 ஜூன் 2026, 1:47 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், அழகப்பபுரம் பேரூராட்சி ஊழியா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

அழகப்பபுரத்தை அடுத்த பொட்டல்குளம் பகுதியைச் சோ்ந்தவா்கள் பிரின்ஸ் மற்றும் அஜித். இருவரும் அழகப்பபுரம் பேரூராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து அலுவலா்கள், ஊழியா்களை பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக, அழகப்பபுரம் பேரூராட்சி செயல் அலுவலா் பூதப்பாண்டி, அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதையடுத்து, பிரின்ஸ், அஜித் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments