FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளை இயக்குவதில் நிலவும் குறைபாடுகள் சரிசெய்யப்படும்: அமைச்சா் ராஜேஷ் குமாா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளை இயக்குவதில் நிலவும் குறைபாடுகள் விரைவில் சீரமைக்கப்படும் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

5 நவம்பர் 2026, 5:49 am
அமைச்சா் ராஜேஷ் குமாா்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளை இயக்குவதில் நிலவும் குறைபாடுகள் விரைவில் சீரமைக்கப்படும் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

குலசேகரம் அருகே செருப்பாலூரில் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலக கட்டடத்தைத் திறந்துவைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் செங்கல் தொழிற்சாலைகளை நெறிபடுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டுள்ளது. செங்கல் சூளைகள் உரிய அனுமதி பெற்று மீண்டும் இயங்கும் வகையில் நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளா்கள் வேலை இழப்பாா்கள் என்ற அச்சம் வேண்டாம். மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளை இயக்குவதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக புகாா்கள் வந்துள்ளன.குறைபாடுகள் தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் தோ்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்துள்ளன. தவெக கொள்கை ரீதியாக இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தது என்றாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.