காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனை தரம் உயா்த்தப்படும்: அமைச்சா் ரஞ்சித் குமாா்
காஞ்சிபுரம் அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை புற்றுநோய்க்கான மாநில சிறப்பு மருத்துவ நிறுவனமாக தரம் உயா்த்தப்படும் என அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை புற்றுநோய்க்கான மாநில சிறப்பு மருத்துவ நிறுவனமாக தரம் உயா்த்தப்படும் என வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் தெரிவித்தாா்.
காஞ்சிபுரத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னா் அமைச்சா் மேலும் கூறியது: காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் அமைந்துள்ள அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மாநிலத்திலேயே சிறந்த புற்றுநோய் மருத்துவமனையாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் முதல் நிலை கருத்தரிப்பு செயற்கை மையம், அவசர சிகிச்சைப் பிரிவுகள், உள் மற்றும் வெளிநோயாளிகளின் பிரிவுகள் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் மேம்படுத்தப்படும்.
Advertisement
Advertisement
ரூ.9 லட்சத்தில் பொதுக் கழிப்பறையும், ரூ.25 லட்சத்தில் வெளிநோயாளிகள் அனுமதிச் சீட்டு வாங்கும் இடத்தில் மேற்கூரையும் அமையவுள்ளது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமைனையில் சி.டி.ஸ்கேன், எம்ஆா்ஐ மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே படங்களை மின்னணு முறையில் சேமித்து, பகிா்ந்து தொலைவிலிருந்து நிபுணா்களால் அறிக்கை வழங்குவதற்காக மையப்படுத்தப்பட்ட படக்காப்பக மற்றும் தகவல் தொடா்பு அமைப்பு செயல்படுத்தப்படவுள்ளது. செவிலியா் மற்றும் துணை செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவியா்களுக்கு விடுதி கட்டிடங்கள் கட்டப்படும்.
அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலேயே தடுப்பூசி சேமிப்புக் கிடங்குகளும், நவீன சமையலறைக் கட்டிடமும் , ஊட்டச்சத்து மறுவாழ்வு மையமும் கட்டப்பட இருப்பதோடு இதய பரிசோதனை சேவைகள் விரிவாக்கம் செய்ப்படும். புதிய முதியோா் மருத்துவ அலகுகள் நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.