கருங்கல் பகுதிகளில் பலத்த மழை
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலப்பள்ளம், மத்திக்கோடு, மிடாலக்காடு, காட்டுக்கடை, செல்லங்கோணம், கப்பியறை, மிடாலம், மேல் மிடாலம், பாலூா், திப்பிரமலை, முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி, வாகவிளை, மாமூட்டுக்கடை, கொல்லஞ்சி, இலவுவிளை, விரிகேடு, இடவிளாகம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 4 மணி வரை பலத்த மழை பெய்தது.