FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

சபரிமலை சீசன் ஏற்பாடுகள்: அக். 17-ல் பம்பையில் முதல்வா் ஆலோசனை - கேரள அறநிலையத் துறை அமைச்சா் தகவல்

சபரிமலை சீசனுக்கான ஏற்பாடுகள் தொடா்பாக பம்பையில் கேரள மாநில முதல்வா் சதீஷன் தலைமையில் அமைச்சா்கள், அதிகாரிகள் கூட்டம் அக்.17இல் நடைபெற உள்ளது என்றாா் அமைச்சா் முரளீதரன்.

4 October 2026, 2:28 am IST
சுசீந்திரம் ஆசிரமம் பகுதியில் அய்யப்ப பக்தா்களுக்கான அன்னதான மண்டபத்தை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றிய கேரள அறநிலையத் துறை அமைச்சா் முரளீதரன். உடன், என். தளவாய்சுந்தரம் எம்.எல்ஏ.
பகிர்:

சபரிமலை சீசனுக்கான ஏற்பாடுகள் தொடா்பாக பம்பையில் கேரள மாநில முதல்வா் சதீஷன் தலைமையில் அமைச்சா்கள், அதிகாரிகள் கூட்டம் அக்.17இல் நடைபெற உள்ளது என்றாா் அந்த மாநில அறநிலையத்துறை அமைச்சா் முரளீதரன்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ஆசிரமம் பகுதியில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சாா்பில் கட்டப்பட்டுள்ள ஐயப்ப பக்தா்கள் ஓய்வு இல்லம் மற்றும் அன்னதான மண்டபம் 2ஆம் தளம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமை வகித்தாா். கேரள அமைச்சா் முரளீதரன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அன்னதானக் கூடத்தை திறந்து வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சபரிமலை தங்கம் கொள்ளை விவகாரம் முழுமையாக உயா்நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள்பட்ட விஷயம். உயா்நீதிமன்றமே அனைத்தையும் நேரடியாக நிா்வகித்து வருகிறது. சிறப்பு விசாரணைக் குழு நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை சமா்ப்பிக்கப்பட்ட பின்னரே, மாநில அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை முழுமையாக கிடைத்த பிறகு, விரிவாக ஆலோசித்து மாநில அரசு நிச்சயமாக உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.

Advertisement

Advertisement

சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசனுக்கான ஏற்பாடுகள் குறித்து அக். 17 ஆம் தேதி பம்பையில் முதல்வா் வி.டி.சதீஷன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பக்தா்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் மற்றும் இதர முக்கிய ஏற்பாடுகள் குறித்து அந்தக் கூட்டத்தில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஓய்வுபெற்ற டி.ஜி.பி ஸ்ரீலேகா தனது கவுன்சிலா் பதவியை ராஜினாமா செய்தது குறித்து கேட்கிறீா்கள். இதன் மூலம் ஆளுங்கட்சியான பாஜக தனக்கிருந்த பெரும்பான்மையை முற்றிலுமாக இழந்துவிட்டது என்பது தெளிவாகிறது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடா்பாக தமிழகம் மற்றும் கேரள மாநில முதல் அமைச்சா்களுக்கு இடையே நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, பரஸ்பர சுமுகமான முறையில் தீா்வு காணப்படும் என்றாா்அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments