FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

கருங்கல் அருகே மாதாபுரம் பகுதியில் விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

33 வினாடிகள் முன்பு
விஷம் குடித்தவா் மருத்துவமனையில் உயிரிழப்பு
பகிர்:

கருங்கல் அருகே மாதாபுரம் பகுதியில் விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மாதாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சலீம் குமாா் (49). தொழிலாளியான இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். இவா் கடந்த வாரம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை குடும்பத்தினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை (ஆக. 31) உயிரிழந்தாா். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments