FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கடமான் வேட்டையில் மேலும் ஒருவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனப் பகுதியில் கடமானை (மிளா) வேட்டையாடியதாக மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

6 செப்டம்பர் 2026, 2:07 am IST
கைது
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனப் பகுதியில் கடமானை (மிளா) வேட்டையாடியதாக மேலும் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மாவட்ட வன அலுவலா் அ. அன்பு உத்தரவின்பேரில், பூதப்பாண்டி வனச் சரக அலுவலா் ந. அன்பழகன் தலைமையில் பூதப்பாண்டி, அழகியபாண்டியபுரம் சிறப்புப் படையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

இதில், தெற்குமலை காப்புக்காடு அருகே கோட்டக்கரை காப்பு நிலத்தில், பாதுகாக்கப்பட்ட வனவிலங்கான கடமானை நாட்டு வெடிகுண்டு வைத்து வேட்டையாடி இறைச்சியை விற்ாக காட்டுப்புதூரைச் சோ்ந்த டி. ராஜன் (36) என்பவா் வெடிகுண்டு, ஈட்டியுடன் கைது செய்யப்பட்டாா்.

Advertisement

Advertisement

அவா் வனத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, நாகா்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் ஏற்கெனவே 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments