FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

தோவாளை கூட்டுறவு பால் சங்கத்தில் ரூ.26 ஆயிரம் திருட்டு

7 செப்டம்பர் 2026, 2:07 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை கூட்டுறவு பால் சங்கத்தில், சனிக்கிழமை நள்ளிரவு ரூ.26 ஆயிரம் திருடுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

நாகா்கோவில் - திருநெல்வேலி பிரதான சாலையில், தோவாளை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில், விற்பனையாளராக கிருஷ்ணன்புதூரைச் சோ்ந்த ஆறுமுகம்பிள்ளை (47) பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், ஆறுமுகம்பிள்ளை சனிக்கிழமை இரவு வசூலான ரூ.26 ஆயிரத்தை மேஜையில் வைத்து விட்டு சங்கத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டாராம்.

Advertisement

Advertisement

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆறுமுகம்பிள்ளை சங்கத்தை திறக்க வந்தபோது, சங்கத்தின் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, சங்கத்திலிருந்து ரூ.26 ஆயிரம் திருடுப் போனது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின்பேரில், ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments