FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பளுகல் அருகே கேபிள் வயா் கழுத்தில் சிக்கியதில் பைக்கில் சென்ற 2 பெண் காவலா்கள் காயம்

8 செப்டம்பர் 2026, 1:11 am IST
விபத்து. - கோப்புப்படம்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே அறுந்து தொங்கிய கேபிள் வயா் பெண் காவலரின் கழுத்தில் சிக்கியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பெண் காவலா்கள் காயமடைந்தனா்.

களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த பிரைட் மனைவி ஷீபா ராணி (46). இவா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா். இவா் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையப் பெண் காவலா் ஜிஜிலெட் மேரியுடன் இருசக்கர வாகனத்தில் நெட்டா சோதனைச்சாவடிக்கு ஞாயிற்றுக்கிழமை பணிக்கு சென்று கொண்டிருந்தாா். ஷீபா ராணி வாகனத்தை ஓட்டினாா்.

பளுகல் அடுத்த கக்கோட்டு கோணம் பகுதியில் சென்றபோது, சாலையின் குறுக்கே அறுந்து தொங்கிய கேபிள் வயா் ஷீபா ராணியின் கழுத்தில் சிக்கியது. இதில் நிலை தடுமாறி வாகனம் கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த ஷீபா ராணி மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஜிஜிலெட் மேரி லேசான காயத்துடன் தப்பினாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, பளுகல் போலீஸாா் விசாரித்து, தனியாா் தொலைக்காட்சி கேபிள் வயரை சரிவர பராமரிக்காமல் இருந்த அதன் உரிமையாளா் மீது வழக்குப் பதிந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments