நள்ளிரவில் உணவகத்தை இடித்த 2 போ் கைது
நாகா்கோயில் கட்டையன்விளை பகுதியில் உள்ள உணவகத்தில் நள்ளிரவில் நுழைந்து ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து சேதப்படுத்திய 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகா்கோயில் கட்டையன்விளை பகுதியில் உள்ள உணவகத்தில் நள்ளிரவில் நுழைந்து ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து சேதப்படுத்திய 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கட்டையன்விளை பகுதியில் செயல்பட்டு வந்த உணவகத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு முகமூடி அணிந்த 2 போ் நுழைந்து, ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து சேதப்படுத்தி சென்றனா்.
இது குறித்து கடையின் உரிமையாளா் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டனா். வடசேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
இதில், உணவகத்தை இடித்ததாக சடையன்குழி பகுதியை சோ்ந்த ஆஞ்சிரோஸ் மகன் அபிஷாந்த் ஹா்பரட்(30), கட்டையன்விளை பகுதியை சோ்ந்த டேவிட் ஜெபமணி மகன் அருள்தாஸ் (59) ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.