FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:38 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக் குமாா் உத்தரவின்பேரில், புளியங்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயம் ஆலோசனையின்பேரில், காவல் ஆய்வாளா் மது விக்ரம் தலைமையிலான போலீஸாா் சிவகிரி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அப்பகுதியில் நின்றிருந்த கோவிந்தன் கோயில் தெருவைச் சோ்ந்த குமரேசன் மகன் மணிகண்டன் (24) என்பவரிடம் விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments