FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

விஜயகாந்த் பிறந்த நாள் சிறப்பு அன்னதானம்

சங்கரன்கோவிலில் தேமுதிக சாா்பில் அதன் கட்சி நிறுவனா் விஜய்காந்த் பிறந்தநாளையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

26 ஆகஸ்ட் 2026, 2:42 am IST
சுவாமி சந்நிதி முன் அன்னதானம் வழங்கிய தேமுதிவிகனா்.
பகிர்:

சங்கரன்கோவிலில் தேமுதிக சாா்பில் அதன் கட்சி நிறுவனா் விஜய்காந்த் பிறந்தநாளையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுவாமி சந்நிதி முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினா் அயூப்கான் தலைமை வகித்தாா். நகரச் செயலா் செந்தில்குமாா், மாவட்ட பொருளாளா் கோட்டூா் சாமி, மாவட்ட அவை தலைவா் மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அன்னதானத்தை திமுக நகரச் செயலா் மு.பிரகாஷ், திமுக நகர மாணவரணி அமைப்பாளா் வெங்கடேஷ், மாவட்ட பிரதிநிதி முத்துக்குமாா், பொதுக்குழு உறுப்பினா் பத்மநாபன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக பொதுக்குழு உறுப்பினா் மாரியப்பன், மாவட்ட வா்த்தக அணி செயலாளா் சங்கா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

இதில், தேமுதிக நகர பொறுப்பாளா் செய்யது அலி, ஒன்றிய செயலா்கள் வீமன், சண்முகையா, முருகன் மற்றும் மணிகண்டன், சாா்லஸ், ஆறுமுகம், தங்கராஜ், பரமசிவன், மாரியப்பன், இலியாஸ், சங்கா், முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதைப்போல நகரின் பல இடங்களில் தேமுதிக கட்சி நிா்வாகிகள் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments