FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

சங்கரன்கோவிலில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

15 அக்டோபர் 2026, 5:13 am IST
கோட்டாட்சியா் அனிதா தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

சங்கரன்கோவிலில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கோட்டாட்சியா் அனிதா தலைமை வகித்தாா். கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் வெங்கடேசன், சிவகரி வட்டாட்சியா் வெங்கடேசசேகா், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மைதீன் பட்டாணி ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், கோட்ட அளவிலான விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைக் தெரிவித்தனா். குறிப்பாக, திருவேங்கடத்தில் விவசாய நிலங்களில் புகுந்து நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் போன்ற விலங்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வீரிருப்பு பகுதியில் இயங்கும் கல்குவாரியால் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாவது குறித்தும் கோட்டாட்சியரிடம் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 30 மனுக்கள் பெறப்பட்டன. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் 45 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 30 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது. 15 மனுக்களுக்கு முறையான பதில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments