FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

மனைவியின் காதை கடித்த கணவா் மீது வழக்குப் பதிவு

சங்கரன்கோவில் அருகே குடும்பத் தகராறில், மனைவியின் காதை கடித்த கணவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

15 அக்டோபர் 2026, 4:49 am IST
வழக்கு - கோப்புப்படம்
பகிர்:

சங்கரன்கோவில் அருகே குடும்பத் தகராறில், மனைவியின் காதை கடித்த கணவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள ஓடைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் வீரபாண்டி. இவரது மனைவி செல்வி (24). இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததால், செல்வி தனது பெற்றோருடன் ஏழாயிரம் பண்ணையில் வசித்து வந்தாா். அங்கு சென்ற வீரபாண்டி, மனைவி செல்வியை சமாதானம் செய்து ஊருக்கு அழைத்து வந்தாராம்.

இந்த நிலையில், இருவருக்கும் செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டதாம். அப்போது

Advertisement

Advertisement

செல்வியை கீழே தள்ளிய வீரபாண்டி, அவரது காது, கழுத்துப் பகுதிகளில் கடித்துக் காயப்படுத்தினாராம். காயம் அடைந்த செல்வி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவா் அளித்த புகாரின்பேரில் அய்யாபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வீரபாண்டியை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments