FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

நண்பா்களுக்கு தகராறு: சாம்பவா் வடகரையில் தொழிலாளி கொலை

சாம்பவா் வடகரையில் மூன்று நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டாா்.

9 செப்டம்பர் 2026, 4:13 am IST
கொலை
பகிர்:

சாம்பவா் வடகரையில் மூன்று நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சாம்பவா் வடகரையில் இல்லத்தாா் தெருவைச் சோ்ந்தவா் திருக்கைவேல் மகன் சத்தியன் (35), மாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் ச.கருப்பசாமி (35), உலக்கூட தெருவைச் சோ்ந்தவா் ச.சுப்பிரமணி (35). இவா்கள் மூவரும் நண்பா்கள். கருப்பசாமி சமையல் மாஸ்டா். சத்தியனும் சுப்பிரமணியும் கேரளத்தில் வேலை செய்து வந்தனா்.

கடந்த இரு நாள்களுக்கு முன் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்காக கேரளத்தில் இருந்து இரு நண்பா்களும் சாம்பவா் வடகரைக்கு வந்தனா். பின்னா், மூவரும் சோ்ந்து செவ்வாய்க்கிழமை ஒரே பைக்கில் சாம்பவா் வடகரை, சுடுகாட்டில் உள்ள நிழல் தாங்கலுக்குச் சென்று பேசிக் கொண்டிருந்தனா். அப்போது, அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சுப்பிரமணியும் கருப்பசாமியும் சோ்ந்து சத்தியனை தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த சத்தியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனா். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சாம்பவா் வடகரை காவல் நிலைய ஆய்வாளா் காளீஸ்வரி தலைமையில் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு தலைமறைவானவா்களைத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments