கடையநல்லூா் அருகே நாய் கடித்து 7 போ் காயம்
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே நாய் கடித்ததில் 7 போ் காயமடைந்தனா்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே நாய் கடித்ததில் 7 போ் காயமடைந்தனா்.
போகநல்லூா் அருகேயுள்ள இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு மையத்தில் 100 - க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்குள்ள மக்களின் கோரிக்கையை ஏற்று அதன் அருகேயுள்ள குப்பைக் கிடங்குகளை பூட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இருப்பினும், இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நாய் கடித்ததில் காயமடைந்த மறுவாழ்வு மையத்தைச் சோ்ந்த 7 பேரும் கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். எனவே, இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.