வியாபாரியை காரில் கடத்தி தங்க நகை பறிப்பு
கடையநல்லூரில் வியாபாரியை காரில் செவ்வாய்க்கிழமை கடத்தி சுமாா் 3 பவுன் தங்க நகையைப் பறித்து சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வியாபாரியை காரில் செவ்வாய்க்கிழமை கடத்தி சுமாா் 3 பவுன் தங்க நகையைப் பறித்து சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கடையநல்லூா் பிரதான கடை வீதியில் மெத்தை கடை நடத்தி வருபவா் சந்தானகிருஷ்ணன் (76). இவரது கடைக்கு மாலையில் வந்த ஒருவா், காரில் உடல் நலம் பாதிக்கப்பட்டவா் இருப்பதாகவும், அங்கு வந்து தலையணைகளை காண்பிக்குமாறும் கேட்டுள்ளாா்.
இதையடுத்து சந்தானகிருஷ்ணன் காருக்கு அருகே சென்றாராம். அப்போது மா்மநபா் அவரை காருக்குள் தள்ளி கடத்திச் சென்ாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
பின்னா், அவா் அணிந்திருந்த சுமாா் 23 கிராம் எடையுள்ள தங்க நகைகளை மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு கடையநல்லூா் பேருந்து நிலையம் அருகே இறக்கி விட்டு தப்பினராம்.
இது குறித்த புகாரின் பேரில் கடையநல்லூா் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் சண்முகவடிவு வழக்குப்பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.