FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரசுப் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைதல் கருத்தரங்கு

திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு புதன்கிழமை தொடங்கியது.

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு புதன்கிழமை தொடங்கியது.
கல்லூரி இயந்திரவியல் துறை சார்பில் இக்கருத்தரங்கு 3 நாள்கள் நடைபெறுகிறது. கருத்தரங்கு தொடக்க நிகழ்ச்சிக்கு, முதல்வர் எம். ஐசக்சாலமோன் ஜெபமணி தலைமை வகித்தார்.  தொழில் முனைவது எப்படி என்பது குறித்து திருநெல்வேலி மாவட்ட தொழில் மையத்தின் உதவிப் பொறியாளர்  எஸ். ராமச்சந்திரன் பேசினார். இதில், இயந்திரவியல்துறை மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். துறைத் தலைவர் டி. ஜெபக்கனி வாழ்த்திப் பேசினார். உதவிப் பேராசிரியை ஏ. கிருஷ்ணவேணி வரவேற்றார். இறுதியாண்டு மாணவர் எம். முத்துராமகிருஷ்ணன் நன்றி கூறினார். வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் இக்கருத்தரங்கில் பல்வேறுத் துறை வல்லுநர்கள் பேசுகின்றனர். நிறைவு விழா, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments